தவெக அரசு ஆசிரியர்கள் நலனில் இரட்டைவேடம் போடுவதாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கையில், 2025 செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என முந்தைய அரசு அறிவித்த நிலையில், தவெக அரசு நீதிமன்றத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக வாதிட்டது. முந்தைய அரசு ஆசிரியர்களுக்காக சிறப்பு தகுதித் தேர்வு, மதிப்பெண் தளர்வு போன்ற பல நடவடிக்கைகளை எடுத்தது. நீதிமன்ற வாதமும், சட்டமன்ற தீர்மானமும் என அரசு இரட்டை நிலைபாடு கொண்டுள்ளது என கூறினார்.
