திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுதையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(75). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான இவர், லால்குடி அரசு மேல்நிலையப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று ஓட்டு போட்டுள்ளார். பின்னர் வாக்குச்சாடியில் இருந்து வெளியில் வந்தவர் அங்கேயே திடிரேன மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள் பாஸ்கரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
