Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு நீதிபதியிலான குழு கரூர் வருகை

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவில் இன்று கரூர் சிபிஐ அலுவலத்திற்கு சுமித் ஷரன் ஐபிஎஸ் வந்துள்ளார்.

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது.

கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக உயிரிழந்தவர்களின் 12 பேர் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பவம் தொடர்பாகவும், இறந்தவர்கள் தொடர்பாகவும், அவர்கள் கூறிய கருத்துக்களை கேட்டு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு குழுவில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி சுமித்சரண், இன்று கரூர் சிபிஐ அலுவலகத்திற்க்கு வந்துள்ளார். மேலும் இந்த வழக்கில் சிபிஐ இதுவரை விசாரணை செய்த தரவுகளை இந்த குழு ஆய்வு செய்ய உள்ளார்.

error: Content is protected !!