சென்னை பெரியமேட்டில் உள்ள ரயில்வே குடியிருப்பில் இருக்கும் 3 வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை பெரியமேடு மெத்தியூஸ் ரயில்வே காலனியில் 3 வீடுகளில் கொள்ளை சமபவம் அதேபோல 2 இருசக்கர வாகனங்களும் திருட்டுப்போன சம்பவம் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்த பெரியமேடு மெத்தியூஸ் ரயில்வே காலனி பகுதில் இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் இரயில்வே பணியாளர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 3 வீடுகளில் பூட்டு உடைந்து கிடைத்தது தெரியவந்தது, குறிப்பாக ரயில்வே பாதுகாப்பு படை காவலர் கோபால், ரயில்வே பணியாளர்கள் செந்தில் மற்றும் ராஜேஷ் ஆகிய 3 பேரின் வீட்டில் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
விடுமுறை தினம் என்பதால் இவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர், இதனை அறிந்த மர்ம நபர்கள் இவர்களது வீடுகளில் கைவரிசை காட்டி உள்ளனர், இவர்கள் வந்த பிறகு எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது என்பது தெரியவரும் என்று பெரியமேடு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது மட்டும்மின்றி இதே வளாகத்தில் நிறுத்தி இருந்த ரயில்வே பணியாளர்கள் செந்தில்குமார், அஜித்குமார் ஆகியோரின் 2 இருசக்கர மோட்டார் வாகனங்களும் திருட்டு பொய் உள்ளது, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும், இந்த ரயில்வே குடியிருப்பில் நடந்த கொள்ளை சம்பவம் அங்கு வசிப்பவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்பொழுது பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை நடத்தில் வருகின்றனர், மேலும் தடயவியல் துறை அதிகாரிகளை வரவழைத்து அங்கு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்யும் பணியானது தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
