Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆட்சியில் பங்கு…ஒத்துவராது… நெல்லையில் வைகோ

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என கூறியது 100 சதவீதம் சரியானது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, “திராவிட முன்னேற்றக் கழகம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்று 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னரும் திராவிட மாடல் ஆட்சியை ஆருயிர் சகோதரர் ஸ்டாலின் தொடர்வார். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என முதலமைச்சர் கூறியது நூற்றுக்கு 100 சதவீதம் சரி என நான் வழிமொழிகிறேன். திமுக தொகுதி பங்கீடு தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டதும் 3 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தி, எத்தனை தொகுதிகளில் போட்டி என அனைத்தும் அறிவிக்கப்படும்” என்றார்.

error: Content is protected !!