Skip to content
Home » ஆர்.ஆர். ஆர். வில்லன் நடிகர் ராய் ஸ்டீவ்சன் மரணம்

ஆர்.ஆர். ஆர். வில்லன் நடிகர் ராய் ஸ்டீவ்சன் மரணம்

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.  ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வில்லனாக ராய் ஸ்டீவ்சன் (வயது 58) நடித்திருந்தார். அயர்லாந்து நாட்டின் லிஸ்பர்ன் நகரில் 1964 ம் ஆண்டு பிறந்த ராய் ஸ்டீவ்சன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் மிகவும் கொடூரமான பிரிட்டிஷ் கவர்னர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.  இவர் பிரபல ஆங்கில படமான ‘தோர்’ படத்திலும், பிரபல வெப் தொடரான ‘ரோம்’ ஆகியவற்றிலும் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில், நடிகர் ராய் ஸ்டீவ்சன் (வயது 58) நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) திடீரென உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. ஆர்ஆர்ஆர் திரைப்பட வில்லன் நடிகர் ஸ்டீவ்சன் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!