Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 லட்சம் பறிமுதல்

திருச்சி அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ரூ.11 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

திருச்சி அருகே உள்ளது அம்மா பேட்டை. இங்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் காந்தி (வயது65). தி.மு.க. பிரமுகரான இவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது

இதனை தொடர்ந்து நேற்று மாலை பறக்கும் படை அதிகாரி சந்திரமவுலி, வருமான வரி துறை அதிகாரி கதிரவன் ஆகியோர் காளியம்மன்கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டிலும், அவரது மகன்கள் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது காந்தி வீட்டில் இருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம், 2 மகன்கள் வீட்டில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.11 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!