Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.10-15க்கு தக்காளி விற்பனை ….. சாலையில் கொட்டப்பட்ட அவலம்…

கரூரில் தக்காளி விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதால் விவசாயி ஒருவர் சுமார் 30 கிலோ தக்காளியை சாலை ஓரத்தில் கொட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி ஒரு கிலோ 150 ரூபாய்க்கு மேல் உச்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது . பின்னர் படிப்படியாக அதன் விலை குறைந்து தற்போது கிலோ ரூ. 10 முதல் ரூ.15

வரை விற்கப்படுகிறது. இதனால், தக்காளி சாகுபடி செய்ய போடப்பட்ட முதலீட்டு செலவு கூட கிடைக்காததால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கரூர் திருச்சி சாலை புலியூர் அருகே சாலை ஓரத்தில் விவசாயி ஒருவர் சுமார் 30 கிலோ தக்காளியை கொட்டி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை உச்சத்தை தொட்ட நிலையில் தற்போது தக்காளி சாகுபடி அதிகரித்ததால் விலையும் குறைந்துள்ளதால் பல்வேறு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!