காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து இந்தியாவிற்கும் தமிழ்நாடு மாநிலத்திற்கும் பெருமைகளைச் சேர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்த வெற்றி நாட்டின் இளைஞர்களுக்குப் புதிய தன்னம்பிக்கையை அளிக்கும் என்று பெருமிதத்துடன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
