Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த பெண்ணிடம் ரூ.8 லட்சம் பறிமுதல்

சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று சிங்கப்பூர் செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்படுவதற்கு தயாரானது. பயணிகளின் உடைமைகள், கைப்பைகள் போன்றவற்றை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி அனுமதித்து கொண்டிருந்தனர்.

சென்னையை சேர்ந்த சுமார் 32 வயது பெண்ணின் உடைமைகளை ஸ்கேன் கருவி மூலம் பரிசோதித்தபோது கட்டுக்கட்டாக இந்திய 500 ரூபாய் நோட்டுகளை அதிகளவில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணக்கட்டுகளை எண்ணி பார்த்தனர். அதில், ரூ.8 லட்சம் இருந்தது. அப்பெண்ணின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். அவரிடம் இருந்து ரூ.8 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!