தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
தஞ்சை மாவட்டத்தில் 72 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு தஞ்சை கீழவாசல் டபீர்குளம் சாலையில் பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் காவலர்கள் விஜய், ரகுநாத் மற்றும் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை இட்டனர். அதில் ரூ.93 ஆயிரத்து 140 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாதது தெரியவந்தது . இதனை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.93140 பறிமுதல் செய்யப்பட்டு தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது . உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

