Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேப்பாக்கத்தில் முதல்முறையாக விளையாடுவது உற்சாகம் தருகிறது… கெய்க்வாட்

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) அரங்கேறும் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:- சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக விளையாடப்போவது உற்சாகம் அளிக்கிறது. அணியில் நீண்ட பேட்டிங் வரிசை இருப்பது சுதந்திரமாக பேட்டிங் செய்ய உதவுகிறது. சென்னை அணியின் காம்பினேஷன் சிறப்பாக இருக்கிறது. தொடர் செல்ல செல்ல அணியின் செயல்பாடு மேம்படும். இந்தாண்டு சென்னையுடன் மேலும் நல்ல நினைவுகளை ஏற்படுத்துவேன் .

இவ்வாறு  அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!