Skip to content
Home » கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம்…. காதலியை கரம்பிடித்தார்

கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம்…. காதலியை கரம்பிடித்தார்

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் . தற்போது இவர் சிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஆடி வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று  தனது காதலி திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.உத்கர்ஷா பவாரை  மகாராஷ்டிரா மாநிலம் மகாபலேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் இந்தி கிரிக்கெட் வீரர்கள் சிலரும் பங்கேற்றனர். இது தவிர நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

24 வயதான உத்கர்ஷா  பவார், மகாராஷ்டிரா பெண்கள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர். புனேவைச் சேர்ந்த இவர் 10க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 11 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.

கெய்க்வாட் மற்றும் பவார் திருமணம் செய்து கொள்வதற்கு முன் 2 வருடங்கள் காதலித்து வந்தனர்.கெய்க்வாட்  பவாருட கடந்த ஆண்டு ஜிம்மில் சுற்றிக் கொண்டிருந்தபோது காணப்பட்டார். ஆனால் அதன்பிறகு, கிரிக்கெட் வீரரோ அல்லது அவரது மனைவியோ சமூக ஊடகங்களில் எந்தப் படத்தையும் பகிரவில்லை.  மவலது கை பந்துவீச்சாளரான உத்கர்ஷா நவம்பர் 2021 இல் சீனியர் மகளிர் ஒருநாள் டிராபியில் பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடினார்.உத்கர்ஷா தற்போது புனேவில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் உடற்தகுதி அறிவியல் நிறுவனத்தில் படித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!