Skip to content
Home » சந்திரயான் 3க்கு முன், நிலவின் தென் துருவத்தில் இறங்க ரஷ்யா திட்டம்… லூனா 25 கிளம்பியது

சந்திரயான் 3க்கு முன், நிலவின் தென் துருவத்தில் இறங்க ரஷ்யா திட்டம்… லூனா 25 கிளம்பியது

  • by Senthil

நிலவை ஆராய்வதற்காக “லூனா-25” என்ற விண்கலத்தை  ரஷ்யா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா அனுப்பியது. இது வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது.

இந்தநிலையில் லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு விண்கலத்தை இன்று ரஷியா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது. 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை லூனா-25 விண்கலம் அடையும் என்றும் பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் முதல் விண்கலமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கு வதற்கு முன்  ரஷியாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்கலாம்.  இதற்காக மூன்று இடங்களை ரஷிய விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.

ரஷியா கடந்த 1976-ம் ஆண்டு முதன் முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. அதன்பின் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விண்கலத்தை அனுப்ப உள்ளது. நிலவின் பாதைகளில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று லூனா-25 ஆய்வு செய்யும். சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!