வருமான வரி வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி நடிகர் எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த மனுக்களை அவர் திரும்பப் பெற்ற நிலையில், வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உரிய காலத்தில் வருமான வரி தாக்கல் செய்யாதது மற்றும் வரி ஏய்ப்பு முயற்சி குற்றச்சாட்டுகளின் பேரில் வருமான வரித்துறை அவர் மீது 6 வழக்குகள் தொடர்ந்துள்ளது. சுமார் ரூ. 7 கோடியே 57 லட்சம் வரி செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 6 வழக்குகளையும் அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
