Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணாமலையால் 30 சீட்டு போச்சு.. வேலுமணி ஆதங்கம்..

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  அதிமுக குறித்து நேற்று கொஞ்சம் அதிகமாகவே பேசியிருக்கிறார். அப்படியெல்லாம் பேசக்கூடாது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். மேலும், அண்ணாமலை அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் அதிகமாக பேசியதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால், அதிகமாக பேசியதே, அண்ணாமலைதான். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி வந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் . அதே கூட்டணி நீடித்திருந்தால், இன்று 30-35 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால், அதெல்லாம் செய்துவிட்டு இன்று மீண்டும் வந்து அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதிமுகவுக்கு எதிரான தவறான பிரச்சாரங்களைத் தாண்டி, கடந்த தேர்தலைவிட, இந்த முறை அதிகமாகவே வாக்குகளைப் பெற்றுள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!