திருச்சி அரியமங்கலம் உக்கடை பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக அறிய மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது அரியமங்கலம் குவளக்குடி மாரியம்மன் கோவில் தெரு சேர்ந்த சஞ்சய் (21) என்ற வாலிபர் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சஞ்சயை கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
