Skip to content

சேலம்: 15 வயது மகளுடன் தம்பதி தற்கொலை

சேலம்  மாநகராட்சி அரிசிபாளையத்தை  சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரேகா (35). இவர்களது மகள் ஜனனி (15). 45 வயதான  பால்ராஜ்  வெள்ளி தொழில் செய்து வருகிறார். இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். இதற்காக வங்கியில் கடன் பெற்றுள்ளார்.

தொழில் நலிவடைந்ததால் சரிவர கடன் செலுத்த இயலாததால் வங்கியில் இருந்து கடனைத் திருப்பி அடைக்குமாறு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மன உளைச்சல்அடைந்து மூவரும் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தினர்.

h

error: Content is protected !!