Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சமா? சேலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

சேலம் கந்தம்பட்டியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக   இருப்பவர் சதாசிவம் .  இந்த அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வருகிறார்கள் என தகவல் பரவியது.  இதை அறிந்த ஆய்வாளர் சதாசிவம்,  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை  தொடர்பு கொண்டு,  தனது அலுவலகத்தில்  சோதனை நடத்தாமல் இருக்க மாதம் ரூ.50,000 தருவதாகவும், முதற்கட்டமாக ரூ.1 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை ஆய்வாளர் ரவிக்குமார் அளித்த புகாரின்பேரில் சதாசிவத்தை பொறிவைத்து பிடிக்க திட்டம் தயாரானது. மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவத்தை, கருப்பூர் அருகிலுள்ள ஓட்டலுக்கு ஆய்வாளர் ரவிக்குமார் வரவழைத்தார். லஞ்சமாக ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற சதாசிவத்தை லஞ்சஒழிப்புத்துறை கையும் களவுமாக கைது செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!