திமுக வடக்கு மண்டல மாநாட்டுக்காக ஏரியில் 12 அடி ஆழத்திற்குச் சட்டவிரோதமாக மணல் அள்ளியதில் அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு ஏற்பட்டதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. இதன் பேரில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் இவ்வழக்கை முழுமையாக விசாரிக்காமல் பதிவு செய்துள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
மணல் கொள்ளை வழக்கு: ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு உயர் நீதிமன்றத்தில் மனு!
