Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணல் திருட்டு… திருச்சி கலெக்டரிடம் புகார் அளித்த குடும்பத்தை தாக்கிய அதிமுக நிர்வாகி…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வெங்கடாஜலபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக சிலர் கடந்த 5 ஆண்டுகளாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதனை லால்குடி வட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வி செய்துள்ளனர்.இந்த நிலையில் அதிமுக திருச்சி புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருண்நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் ஆனந்தகுமாரின் வீட்டிற்கு சென்று ஆனந்த் குமார் அவரது சகோதரர் ராஜேந்திரன் உள்ளிட்டோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்து புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத மணல் திருட்டு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தவரின் குடும்பத்தை அதிமுக நிர்வாகி ஆதரவாளர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
error: Content is protected !!