Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணல் கொள்ளை… தடுக்க முயன்ற தஞ்சை எஸ்எஸ்ஐயை கொல்ல முயற்சி

மணல் கொள்ளை... தடுக்க முயன்ற தஞ்சை எஸ்எஸ்ஐயை கொல்ல முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் கோடுகிழி அருகே சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் மெலட்டூர் காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துவேல் மற்றும் தலைமை காவலர் ராமன் ஆகியோர் இரண்டு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோடுகிழி பாலம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது சாலையில் எதிரே வந்த டிராக்டரை நிறுத்த போலீசார் முயற்சி செய்தனர் .

போலீசாரை கண்ட ஓட்டுநர் டிராக்டரை நிறுத்தாமல் அதிலிருந்து குதித்து தப்பி ஓடினார்.
அப்போது டிராக்டரை நிறுத்த முயற்சி செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துவேல் மீது மோதியது.
இதில் முகம் மற்றும் கால்களில் படுகாயம் அடைந்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துவேல் சம்பவ இடத்திலேயே படுகாயங்களுடன் நிலை குலைந்து துடிதுடிக்க கீழே விழுந்தார்.

அருகில் இருந்த தலைமை காவலர் ராமன் உடனடியாக மெலட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அங்கிருந்து வருகை தந்த உதவி ஆய்வாளர் போதிமணி மற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து படுகாயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துவேலை மீட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுனரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போலீசாருக்கு நடந்த இந்த நிகழ்வு மெலட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!