தூய்மை பணியில் தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாநகராட்சியில் ஒப்பந்த அடிபடையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் கொட்டும் மழையில் நனைந்த படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தங்களின் வங்கி கணக்கில் PF ESI பணத்தை வரவு வைக்க வேண்டும்
மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்த ஊதியத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
இரண்டு மாத ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்கிட வேண்டும்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்களை ப்ணி நிரந்தரம் செய்திட வேண்டும என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
தஞ்சை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் கொட்டும் மழையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் நனைந்த படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.
