Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் அருகே விஏஓ அலுவலகச் சுவரை உடைத்த தொழிலாளி!

பாபநாசம் அருகே விஏஓ அலுவலகச் சுவரை உடைத்த தொழிலாளி!

உரிய ஆவணங்கள் இல்லை என வீட்டு மின் இணைப்பு சான்றிதழ் கொடுக்க மறுத்ததால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுற்றுச்சுவரை சம்மட்டியால் அடித்து உடைத்த தொழிலாளி. பாபநாசம் அருகே பரபரப்பு

உரிய ஆவணங்கள் இல்லை என வீட்டு மின் இணைப்பு சான்றிதழ் கொடுக்க மறுத்ததால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுற்றுச்சுவரை சம்மட்டியால்
அடித்து உடைத்த தொழிலாளியினால் பரபரப்பு ஏற்பட்டது.

பாபநாசம் அருகே பசுபதிகோவில் மெயின் ரோட்டில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு கிராம நிர்வாக அலுவலராக நவசக்தி இருந்து வருகிறார். இந்நிலையில் பசுபதிகோவில் பெரியதெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வீட்டு மின் இணைப்பு சான்றிதழ் கேட்டதாக தெரிய வருகிறது .
மேலும் கிராம நிர்வாக அலுவலர் அந்த தொழிலாளியிடம் உரிய ஆவணங்கள் கொண்டு வாருங்கள்
என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் கிராம நிர்வாக அலுவலர் நவசக்தி அலுவலகத்தை விட்டு வெளியே சென்றிருந்த சமயத்தில் சம்மட்டி எடுத்து வந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுற்றுச்சுவரை இடித்து தள்ளியுள்ளார்.
மேலும் அலுவலகத்தின் இரும்பு வாயிற்கதவின் பூட்டையும் உடைக்க முயன்றுள்ளார்.
இது பற்றி தகவலறிந்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ஆரோக்கிய பவுல்ராஜ், செயலாளர் சிவப்பிரகாசம், பொருளார் பார்த்தசாரதி, மாவட்ட இணை செயலாளர் ராஜேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பசுபதிகோவில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு குவித்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பசுபதிகோவில் கிராம நிர்வாக அலுவலர் நவசக்தி கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!