Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சானியா மிர்சா ஓய்வு பெற முடிவு…..

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார். இந்த நிலையில் சானியா மிர்சா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி ஆட்டமாகும். இது தொடர்பாக அவர் கூறியதாவது… டபிள்யூ.டி.ஏ. இறுதி போட்டிக்கு பிறகு டென்னிஸ் ஆடுவதை நிறுத்திக் கொள்ள போகிறேன். துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டியோடு நான் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு சானியா மிர்சா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வருகிற 16ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு சானியா மிர்சா ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜூவ் ராமுடன் இணைந்து கால் இறுதி வரை முன்னேறி இருந்தார். ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சா 2007ம் ஆண்டு 27வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். 2005ல் அமெரிக்க ஓபனில் 4வது சுற்று வரை முன்னேறியதே அவரது சிறந்த நிலையாகும். இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 24-வது வரிசையில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!