Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சரக்கு பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்….

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் மகன் ராஜேஷ் குமார் (24) அதே ஊரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் ராம்குமார் (25) வடக்கு கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ் மகன் ராஜா (25) நண்பர்கள். இவர்கள் 3  பேரும் சம்பவத்தன்று வெட்டிக்காட்டு பாலம் அருகில் உள்ள மதுபானக் கடை அருகே நின்று பேசிக் கொண்டுள்ளனர். அப்போது ராஜாவுக்கும் ராஜேஷ் குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா மதுபாட்டிலால் ராஜேஷ்குமார் தலையில் தாக்கியுள்ளார்.  இதில் தலையில் படுகாயம் அடைந்த ராஜேஷ் குமார் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தந்தை ஞானசேகர் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு  போலீசார் ராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!