Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறையிலிருந்த போது எனக்கு திட்டமிட்டு கொரோனா பரப்பப்பட்டது.. சசிகலா பகீர் குற்றச்சாட்டு

பெங்களூரு சிறையில் இருந்த போது தனக்கு திட்டமிட்டு கொரோனா தொற்று பரப்பப்பட்டதாக சசிகலா வேதனையுடன் கூறி இருக்கிறார். கொரோனா தொற்றால் பாதித்த தனக்கு முதல் 15 நாட்கள் முறையான சிகிச்சை கூட அளிக்கவில்லை வேண்டும் சசிகலா குற்றம்சாட்டி உள்ளார்.

தான் சிறையில் இருந்த போது கொரோனா தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பெண்ணாக இருக்கும் சிறைச்சாலையில், தான் அதுவரை பார்த்திராத புது பெண் ஒருவர் தென்பட்டதாக குறிப்பிட்டார். நிச்சயம் அந்த பெண் சிறையில் உள்ளவர் இல்லை, அவரை வெளியில் இருந்து திட்டமிட்டே அழைத்து வந்துள்ளனர்.

அந்த பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர், முன்பின் பார்த்திராத அந்த தொற்று பாதிக்கப்பட்ட பெண் நான் இருந்த அறையில் உட்கார்ந்திருந்தார். நீங்கள் யார், புதிதாக இருக்கிறீர்களே, ஏன் இங்கு உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு அந்த பெண் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த சம்பவம் மாலை 4 மணியளவில் நடந்தது. அந்த பெண் யார், ஏன் அறையில் ஏன் உட்கார்ந்திருக்கிறார் என்று நான் சிறை வார்டனிடம் சென்று கேட்டேன். பின்னர் நான் என் அறைக்கு திரும்பி வருவதற்குள் அந்த பெண்ணை அங்கு காணவில்லை, அவர் அதற்குள் சிறைச்சாலையை விட்டு வெளியவே போயிருந்தார்.

ஆக மொத்தம் அந்த பெண் சிறையில் இருப்பவர் இல்லை, வெளியாள். எப்படி அவர் சிறைக்குள் வந்தார், என் அறைக்குள் அமர்ந்தார், மீண்டும் திரும்பி வந்தது பார்ப்பதற்குள் எப்படி சிறைச்சாலையை விட்டு வெளியே சென்றார் என்பதெல்லாம் கடவுளுக்கே வெளிச்சம். இந்த சம்பவம் நடந்து மறுநாளில் இருந்த எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. நான் இருந்த பெண்கள் சிறைச்சாலையில் சுமார் 200 பேர் இருந்த நிலையில் எனக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

முதல் 15 நாள் சிறையில் மருத்துவர் இருந்தும்,அவர் வந்து என்னை பார்த்து சிகிச்சை அளிக்கவில்லை. என்னால் நடக்க கூட முடியாத நிலைமை ஏற்பட்ட போது நான் சிறைச்சாலையில் இருக்கும் பெண் எஸ்பி-யிடம் முறையிட்ட பிறகே என்னை சிறை மருத்துவர் வந்து பரிசோதித்தார். அப்போது எனக்கு 85% கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக என்னை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டார்கள், பின்னர் அங்கு சென்று தான் கொரானாவிற்கான சிகிச்சையே எனக்கு துவங்கியது. மிகுந்த சிரமத்திற்கிடையே தான் அதிலிருந்து மீண்டு வந்தேன் என சசிகலா உருக்கமுடன் கூறி இருக்கிறார்.

error: Content is protected !!