அளவுக்கு அதிகமாக போதை பொருள் எடுத்துக் கொண்டதே சௌதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் மரணத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள சொகுசு விடுதியில் அவர் கடந்த ஆண்டு நவம்பர் சடலமாக மீட்கப்பட்டார். பிரிட்டன் கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. மருத்துவ அறிக்கைகளின்படி, அளவுக்கு அதிகமான மது மற்றும் போதை பொருள் உட்கொண்டது அவரது உயிர் பிரிய காரணம் என தெரியவந்துள்ளது.
