Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் புகார் மனு

பிரபல ‘யூடியூபர்’ சவுக்கு சங்கர் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், மும்பையை சேர்ந்த கூலிப்படையை அனுப்பி தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், டெல்லியில் இருந்து உளவுப்பிரிவு போலீசார் தனக்கு தகவல் தெரிவித்துள்ளனர் என்றும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!