Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்ன கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மகன் தர்ஷன் (11) என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தர்ஷனை படிக்குமாறு பெற்றோர் அடிக்கடி திட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த சிறுவன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்‌. பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர் மகனை அழைப்பதற்காக அறைக்கு சென்றபோது தர்ஷன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சிறுவனின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்கச் சொல்லி பெற்றோர் திட்டியதால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்
பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!