சிவகங்கை மாவட்டம் கோமாளிபட்டி அருகே பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், பள்ளி வாகன ஓட்டுநர் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தில் பயணம் செய்த 9 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
