Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  டெல்டா மாவட்டங்களிலும், திருச்சி மாவட்டத்திலும்  நேற்று இரவு முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் லேசான தூறல் போடுகிறது. வானம் கும்மிருட்டாக காணப்படுகிறது.

எந்த நேரத்திலும் பலத்த மழை கொட்டலாம் என  வானம்  கார்மேகத்துடன் காட்சி அளிக்கிறது. இதனால் திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற  எதிர்பார்ப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் திருச்சி மாவட்டத்தில் செயல்படும். விடுமுறை கிடையாது என திருச்சி கலெக்டர்  பிரதீப் குமார் அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!