Skip to content
Home » புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (ஜூன் 1) பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதனிடையே, தமிழகம் புதுவையில் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், வெப்ப அலை நீடிப்பதால், பள்ளிகளை திட்டமிட்டபடி ஜீன் 1ல் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வெயில் காரணமாக தமிழகத்திலும் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!