Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல செய்தி நிறுவனத்திற்கு சீல்

டில்லி ரஃபி மார்க் பகுதியில் இயங்கி வரும் ‘யு.என்.ஐ’ (UNI) செய்தி நிறுவன அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1979ம் ஆண்டு அலுவலகம் கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில், 40 ஆண்டுகளாகக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், அந்த நில ஒதுக்கீட்டை நில மேம்பாட்டு ஆணையம் ரத்து செய்தது.

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் அலுவலகத்தை மூடி ஊழியர்களை அப்புறப்படுத்தினர்.

ஆனால், இந்த நடவடிக்கையின் போது ஊழியர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள செய்தி நிறுவனம், இது ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் எனத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் டெல்லி பத்திரிகையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!