ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 101 சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை 17 மாநிலங்களில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து பாதுகாப்பாக சொந்த மாநிலத்துக்கு அழைத்து வரும் வகையில், ஒடிசா போலீசாரின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு சார்பில் ‘ஆபரேஷன் அன்வேஷன்’ என்ற சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சுமார் 10 முதல் 12 நாட்கள் பல்வேறு மாநிலங்களில் தேடுதல் நடத்தப்பட்டது.
