தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா என அவர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பட்டிமன்றத் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு…இபிஎஸ் இரங்கல்
