Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின வாலிபரை மிரட்டிய தி.மு.க. ஒன்றிய செயலாளர் நீக்கம்..

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் பட்டியலினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்று இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த சேலம் தெற்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிக்கம் பட்டியலின இளைஞரை பிடித்து வெளியே தள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளைஞரின் சாதியை குறிப்பிட்டு, அவரின் தந்தையையும் மிக மோசமாக வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது வீடியோ பதிவாக சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது.  இதற்கிடையே இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து அவர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளார். சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு உள்ளார். எனவே அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!