Skip to content

நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ்…… திருப்பூரில் சுப்பராயன்

திமுக  கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  நாகை(தனி), திருப்பூர் ஆகிய தொகுதிகள்  கடந்த தேர்தலைப்போல இப்போதும் ஒதுக்கப்பட்டுள்ளது.  நாகை  தொகுதியில் திருவாரூர் மாவட்ட  இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வை செல்வராஜ் வேட்பாளராக  நிறுத்தப்படுகிறார். இவர் மன்னார்குடி சவளக்காரன் பகுதியை சேர்ந்தவர். பட்டதாரி.

திருப்பூர்  தொகுதி வேட்பாளராக தற்போதைய  எம்.பி. சுப்பராயன் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்படுகிறது. இதுபற்றி்ய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்.

செல்வராஜ் பயோ டேட்டா: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வை.செல்வாஜ் (வயது 62),

மன்னார்குடி அரசுக்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் ( எம்.ஏ. – எம்.பில் ) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் வரை பெற்ற இவர், கல்லூரியில் படிக்கும் பொழுதே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின், மாணவர் இயக்க தலைவராக பணியாற்றினார்.

பின்னர் 1980 ம் ஆண்டு கட்சி உறுப்பினராக சேர்ந்து தன்னை முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுத்தி கொண்டார், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் செயலாளராக அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளராக 12ஆண்டு காலம் பொறுப்பிலிருந்து சிறப்பாக செயல்பட்டார்,

மேலும் திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக, பின்னர் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டார்,
அப்போது விவசாயிகளின் பிரச்சினையில் தீவிர கவனம் மேற்கொண்டார், மூணாறு தலைப்பு வெண்ணாறு பிரிவிலிருந்து *பொன்னிரை வரை சுமார் 50 கீ.மீட்டர் அனைத்து அரசியல் கட்சியினர், வெகுமக்கள் என 25 ஆயிரம் பேரை ஒரே நாளில் திரட்டி சிரமதான பணியில் ஈடுபடுத்தி தூர்வாரும் பணியை மேற்கொண்டார்.
அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

டெல்லியில் நடைபெற்ற பஞ்யத்து ராஜ் மாநாட்டில்
குடியரசு தலைவர், இந்திய பிரதமர் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரபகிர்வு சம்மந்தமாக பேசினார்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளராகவும் செயல்பட்டவர்,

தற்போது இரண்டாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி ஜீவரேகா நீதித்துறையில் பணியாற்றி வருகிறார், இவருக்கு இரண்டு குழந்தைகள் இதில் மகள் வெண்பா வழக்கறிஞராகவும், மகன் நண்பா பட்டப்படிப்பும் படித்து வருகிறார், எளிய குடும்பத்தில் பிறந்த இவர் செயலாற்றல் மிக்க எளிய தலைவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர், சாதாரண, ஏழை எளிய மக்களின் வாழ்வுரிமைக்காக அனுதினம் களத்தில் நின்று போராடுபவர். எ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!