Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலெக்டர் -அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்- பரபரப்பு…

தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவருக்கு திருப்போரூர் தாலுகா காயர் பகுதியில் சொந்தமாக 2 ஏக்கர் 18 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 18 சென்ட் இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது

தன் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு முறைப்படி அளந்து அதற்கான பட்டாவை வழங்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மகேஷ்குமார் போராடி வருகிறார்

இதுதொடர்பாக திருப்போரூர் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எனப் பல்வேறு இடங்களுக்கு அலைந்து 20-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்துள்ளார்

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் வீரப்பன் அவர்களை மகேஷ்குமார் நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது, இத்தனை ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடும் விரக்தியடைந்த அவர் ஆட்சியரிடம் நேரடியாக ஆதங்கத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நான் 5 வருடமாக மனு கொடுத்து வருகிறேன் இதுவரை எந்தப் பயனும் இல்லை. நிலத்தை வந்து அளப்பதற்காக இரண்டு முறை அரசுக்கு முறைப்படி பணம் கட்டியுள்ளேன் பணம் கட்டி ஒன்றரை வருடம் ஆகியும் இதுவரை சர்வேயர் வந்து நிலத்தை முறையாக அளக்கவில்லை என ஆட்சியர் முன்னிலையிலேயே ஆவேசமாகக் கூறினார்.

தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அளித்த மனுவின் காரணமாக முறையான விசாரணை மேற்கொள்ளாமல் ஒருதலைபட்சமாக செயல்பட்டு தீர்வு வழங்கியதாக கூறப்படுகிறது

இதுகுறித்து மீண்டும் இரண்டு முறை மேல் முறையீடு செய்த நிலையிலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆதங்கத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

இதனை செய்தி சேகரிக்க வந்த செய்தியாளரை மாவட்ட ஆட்சியர் ஏன் வீடியோ எடுக்குறீங்க எதற்காக வீடியோ எடுக்குறீங்க என்கிட்ட பர்மிஷன் கேட்ட தான் நீங்க எடுக்கணும் என வாக்குவாதத்தில் ஆட்சியர் வீரப்பன் ஈடுபட்டார்

அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கும் மகேஷ் குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிகளில் இருந்த காவலர் திடீரென அவரது சட்டையை பிடித்து வெளியே தள்ளிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

அப்போது நான் மனு கொடுக்க வந்திருக்கிறேன் எதற்கு காவல் ஆய்வாளர் என்னை பிடித்து தள்ள வேண்டும் அந்த ஊழல் குற்றச்சாட்டில் இவர் பெயரும் இருப்பதால்தான் இவர் இது போல் அராஜகத்தில் ஈடுபடுகிறார் தாயார் காவல் ஆய்வாளர் மருதப்பன் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது

ஆட்சியரை நாங்கள் மாவட்ட ஆட்சியராக பார்க்கவில்லை ஒரு நடுவர் நீதிபதியாக பார்க்கிறோம் ஆனால் ஒரு தலைப்பட்சமாக எப்படி செயல்படலாம் நாடகத்துக்கு தான் இந்த ஆட்சியர் கூட்டம் நடத்துகிறார்களா என காட்டமாக தெரிவித்தார்

இது குறித்து மகேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது :

நில அபகரிப்பு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக தாலுகா அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தேன் கடந்த 15 ஆம் தேதி ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தேன் என்ற ஒரே

காரணத்திற்காக 5 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனையை மூன்றே நாளில் எனக்கு நிலம் கிடையாது என பதில் கூறுகிறார்கள்
இவர் மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல மாவட்ட நீதிபதி போல செயல்படுவார் என்று தான் அவரிடம் மனு கொடுத்தேன் ஆனால் மாவட்ட ஆட்சியர் வீரப்பன் என்ன செய்திருக்கிறார் என்றால் அராஜகமாக ஒரு தலைப்பட்சமாக விசாரணைக்கு என்னை கூப்பிடாமல் ஒரு தலைப்பட்சமாக மூன்றே நாட்களில் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறார் இந்த தீர்ப்பானது ஊழலுக்கு சாதகமானது நான் இது குறித்து மேலும் மூன்று முறை மேல்முறையீட்டு மனு கொடுத்திருக்கிறேன் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை அதன்படி இன்று நேரில் சென்று கேட்டபோது நீங்க நீதிமன்றத்திற்கு போங்க என கூறுகிறார் வருவாய்த்துறை அதிகாரிகள் அராஜகப் போக்காக இடம் எனக்கு இல்லை என்று சொல்வார்கள் நான் நீதிமன்றத்திற்கு சென்றால் அங்கு 10 ஆண்டுகள் எனக்கு வீணாகப் போகும் வருவாய்த்துறை அதிகாரிகள் பண்ணும் பிழைகளால் நீதிமன்றத்தில் நில வழக்குகள் குவிந்து இருக்கிறது ஆனால் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் என்ன சொல்கிறார் என்றால் இது ஊழல் இல்லாத ஆட்சி இது தூய ஆட்சி நான் ஊழலை ஒழித்து விடுகிறேன் என சுதந்திர தின விழாவில் கூட அவர் பேசுகிறார் இன்னும் அவர் ஒரு சினிமா பாணியிலேயே செய்து கொண்டிருக்கிறார் ஜோசப் விஜய் அவர்களே செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஊழல் நடக்கிறது இதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது இதற்கு விசாரணை வைக்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா திராணி இருக்கிறதா என காட்டமாக பேசினார் மாவட்ட ஆட்சியரிடம் எனது கோரிக்கையை மனுவாக கொடுத்தால் அவர் காவல்துறையை வைத்து என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார் மேலும் கோர்ட்டுக்கு போ என சொல்கிறார் இதை சொல்றதுக்கு தான் மாவட்ட ஆட்சியரா அவர் இருக்கிறாரா இவர் ஐஏஎஸ் படித்து வந்த அதிகாரியா என்று எங்களுக்கு தெரியவில்லை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டால் ஏழை எளிய மக்களுக்கு நீதி செய்வார் என்று எதிர்பார்த்தால் இவர் போலீஸ்சை வைத்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார் என தெரிவித்தார்

மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண வேண்டிய மாவட்ட ஆட்சியர்

(கலெக்டர் வீரப்பன்)

அலுவலகத்தில்.நீதி கேட்க வந்த நபர் மீது காவல்துறை நடத்திய வன்முறை ஒருபுறமிருக்க, இச்சம்பவத்தை வீடியோ எடுத்த செய்தியாளரை செய்தி சேகரிக்க விடாமல் ஆட்சியர் தடுத்த விதம் சமூக ஆர்வலர்களிடையேயும் பத்திரிகையாளர் வட்டாரத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

என்னிடம் அனுமதி கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் உச்ச அதிகாரியில் இருக்கும் ஒருவரே ஊடகங்களின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில்

பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பொதுவெளியிலும் மக்கள் குறைதீர்ப்பு முகாமிலும் நடக்கும் அநீதியை வெளிக்கொண்டுவர வேண்டிய ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களின் குரலை நசுக்கும் வகையில் ஆட்சியர் நடந்து கொண்டது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது

தவறைத் தட்டிக்கேட்க வேண்டிய அதிகாரியே தவறைச் சுட்டிக்காட்டும் ஊடகங்களை

அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இந்தச் சம்பவம், மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் இதுதானா என்ற காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!