கோவை உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியில் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தோழமைக் கட்சிகளுடன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..!
முன்னதாக உக்கடம் நரசிம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி.
கனி ராவுத்தர் வீதியில் உள்ள அத்தா ஜமாத் குடியிருப்பு வளாகத்தில் இஸ்லாமிய பெண்கள் ஆரத்தி எடுத்து ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். பிறகு வேட்பாளர் செந்தில் பாலாஜி அவருடைய குறைகளை கேட்டு அறிந்தார். அங்கிருந்து கெம்பட்டி காலனி, வைசால் வீதி, கருப்

ப கவுண்டர் வீதி, உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். பொதுமக்கள் ஒரு சிலர் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர் திமுக ஆட்சி அமைந்துள்ள

உங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என்றார். பிறகு கருப்ப கவுண்டர் வீதியில் உள்ள அரோமா பேக்கரியில் டீ குடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
