Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு…

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. இதையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் நாளை சென்னை ஐகோர்ட் தீர்ப்பளிக்க உள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தீர்ப்பளிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!