எல்லை மீறி பேசும் எடப்பாடி பழனிச்சாமி தோல்வி பயத்தின் வெளிப்பாடு – கரூரில் செந்தில் பாலாஜி பதிலடி.
கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாந்தோன்றிமலை பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் உரையாற்றிய செந்தில் பாலாஜி நாங்கள் சாதனையைச் சொல்கிறோம்..அவர்கள் ஒருமையில் பேசுகிறார்கள்.நாங்கள் கடந்த ஐந்தாண்டு காலத்தில் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சியினரோ நாகரிகமற்ற முறையில் ஒருமையில் பேசி ஓட்டு கேட்கிறார்கள். இதுவே அவர்களது தரத்தைக் காட்டுகிறது.
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை விமர்சித்துப் பேசியதற்குப் பதிலளித்த அவர்:
அனைவருக்கும் செய்யப்படும் ஒரு சாதாரண அறுவை சிகிச்சைதான் எனக்கும் செய்யப்பட்டது. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், பேசுபவர்களுக்கு வயதுக்குத் தகுந்த பேச்சு வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமியின் கண்களிலும் பேச்சிலும் தோல்வி பயம் தெரிகிறது. அந்த விரக்தியின் வெளிப்பாடுதான் இந்த நாகரிகமற்ற பேச்சு.
நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எல்லை மீறிப் பேசுங்கள். உங்களுக்குப் பேச மட்டும்தான் தெரியும், செயல்படத் தெரியாது.
கரூர் மக்களுக்கு நீங்கள் ஏதாவது செய்திருந்தால் அதைச் சொல்லி வாக்குக் கேட்டிருக்கலாம். ஆனால், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதுதான் உங்கள் பாணியாக இருக்கிறது.
இன்னும் நிறையப் பேசுங்கள். நீங்கள் பேசப் பேச எனக்குத் தான் விளம்பரம் கிடைக்கும். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். பிரதமர் மோடியைத் தமிழ்நாட்டிற்கு வாருங்கள் என அழைப்பதைப் போல, நீங்களும் அடிக்கடி கரூருக்கு வாருங்கள்.
கோவில் பிரச்சனை குறித்து வீடாக சென்று சென்று நோட்டீஸ் கொடுக்கிறார்கள் என்று சொன்னார்கள் ஆனால் பிரச்சனைக்கு காரணமானவர்களை இப்படி ஒரு வேலையை செய்கின்றனர்.
கோவில் நிலம் பிரச்சனையை பொருத்தவரை எதிர்க்கட்சி வேட்பாளர் சொல்லுகின்ற கருத்தை உண்மைக்கு மாறான கருத்துக்களை மக்களிடம் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு வேலையை செய்து வருகின்றனர் மக்கள் யாரும் அதை நம்ப வேண்டாம்,
சட்ட உதவி செய்யப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார், உரிய தீர்வு எட்டப்படும் என்று சொல்லாமல் வெறும் கண் துடிப்பதற்காக சொல்கிறார்.
ஆனால் பெருமாள் கோவில் அடிவாரத்தில் இருந்து சொல்கிறேன் இனாம் நிலம் பிரச்சனைக்கு திராவிடம் ஆடல் ஆட்சி உரிய தீர்வு காணும்.
ஒரு எதிரி இல்லை 100 எதிரி வந்தாலும் கரூரில் உங்கள் பருப்பு வேகாது என பேசினார்
