அமலாக்கத்துறை வழக்கில் ஒரு ஆண்டிற்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மதியம் திடீரென ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக செந்தில்பாலாஜிக்கு சளி தொல்லை இருந்து வருகிறது என கூறப்படுகிறது. நேற்றிரவிலிருந்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சில பரிசோதனைகள் மேற்கொள்ளவும் தேவை எனில் அட்மிட் செய்யவும் இல்லை எனில் செந்தில்பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு திரும்புவார் எனவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.