Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் தேக்கம் – பயணிகள் அவதி!

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தின் அருகே விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து சென்னை, பெங்களூரு, ஊட்டி, திருவனந்தபுரம், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு தொலைதூரப் பகுதிகளுக்கு நாள்தோறும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், தொலைதூரப் பயணங்களுக்கான முன்பதிவு மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்து நிலையத்தின் ஒரு பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பேருந்துகளைக் சுத்தம் செய்யும் நீர், சாக்கடை நீர் மற்றும் அருகில் உள்ள தேநீர்க் கடையின் கழிவுநீர் ஆகியவை தேங்கி நிற்பதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
இதனால் பேருந்தில் பயணிக்க வரும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதியடைந்து, முகம்

சுளித்தபடி பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கியுள்ள கழிவுநீரால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் இருப்பதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகமும் – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, பேருந்து நிலையத்தைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!