Skip to content
Home » சுவீடனில்… செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி…8ம் தேதி தொடக்கம்

சுவீடனில்… செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி…8ம் தேதி தொடக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடனில்  ‘உடலுறவு’ என்பது ஒரு விளையாட்டுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை சுவீடன் பெற்றுள்ளது.இந்தப் போட்டி வருகிற ஜூன் 8-ந்தேதி முதல் நடத்தப்பட உள்ளதாகவும், பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துணையை கவர்தல், உடல் மசாஜ், வாய்வழி பாலியல், உடலுறவு, சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போட்டியை நடத்த ‘சுவீடன் செக்ஸ் பெடரேஷன்’ ஏற்பாடு செய்துள்ளது. போட்டியில் 70 சதவீதம் வாக்குகளை பார்வையாளர்கள் அளிப்பார்கள் என்றும், நடுவர்கள் 30 சதவீதம் வாக்குகளை அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!