திருநெல்வேலியில் 2024ஆம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரவேல் செல்வசேகர் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பாளையங்கோட்டை மகளிர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். விசாரணையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நேற்று (செப்., 30) குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை சிறுமிக்கு பாலியல் தொல்லை-குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை
