உலகை உலுக்கி இருக்கும் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு, 4.4 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதே காரணம் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த பெரு வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணம் அல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.
முன்பு தெரிவிக்கப்பட்டதைப் போல நிலநடுக்கத்தால் இந்த பெரு வெள்ளம் ஏற்படவில்லை, மாறாகப் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட நிலநடுக்கமே அது என என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம், நேபாள பகுதியில் பதிவான 4.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கம், இயல்பான நிலநடுக்கம் அல்ல. நேபாளம் – சீனா எல்லையில் நிலநடுக்கம் ஏற்படவில்லை. பனி ஏரி உடைந்து வெள்ளமும், பாறைகளும் பள்ளத்தாக்கை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்ததில் 4.4 நில அதிர்வு பதிவாகி உள்ளது. அதாவது ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறை சரிவு மற்றும் இடிபாடுகள் பள்ளத்தாக்கை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்ததால் ஏற்பட்ட நிலஅதிர்வே என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேபாள-சீன எல்லையில் காத்மாண்டுவிற்கு வடக்கே ஏற்பட்ட நடுக்கத்தை கருவிகள் முதலில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக பதிவு செய்தன.இந்த நிலையில் தான் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அங்கு டெக்டோனிக் நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். மொத்தத்தில் ஒரு பெரிய பனிப்பாறை உடைந்து மலையிலிருந்து கீழே சரிந்து விழுந்ததே இந்த 4.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்திற்கு காரணம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
