நெல் வரத்துக் குறைவால் தமிழகத்தில் அரிசி மூட்டைக்கு ரூ.500 வரையும், மிளகாய், பூண்டு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் 20% வரையும் கடுமையாக உயர்ந்துள்ளன. ஆந்திரா, கர்நாடகாவில் விளைச்சல் குறைந்ததால் அரிசி விலை உயர்வு டிசம்பர் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் மலிவாக வழங்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.
