Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு- 3 மாணவர்கள் பலி

பிலிப்பைன்ஸில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தக்லோபன் நகரில் உள்ள சான் ஜோஸ் நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். பலியான 3 பேரும் மாணவர்கள் ஆவர். காயமடைந்த 5 பேருக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை 2 பேர் நிகழ்த்தி உள்ளனர். ஒருவர் அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆவார். அந்த பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். மற்றொரு நபர் பின்னர் அதிகாரிகளிடம் சரணடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் 9 மி.மீ. கைத்துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

error: Content is protected !!