Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிவாஜி வீடு ஜப்தி: உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு…

நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் மூத்த மகன் ராம்குமார்,  இவரது மகன் துஷ்யந்த்,  சக்சஸ் என்ற படத்தின் மூலம்அறிமுகமானார். பின்னர்  படத்தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டார். இதற்காக அவர்  ஒரு நிறுவனத்திடம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கி இருந்தார். தற்போது  அசலும், வட்டியுமாக அது 9 போடியாகி விட்டது.

ஆனால் துஷ்யந்த் கடனை செலுத்தவில்லை.  கடன் வழங்கிய நிறுஞவனத்தின் நோட்டீசுக்கும் பதில் அளிக்கவில்லை. இதனால் அந்த நிறுவனம்  ஐகோர்ட்டை நாடியது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்  சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

வீட்டில்  தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீடு நடிகர் பிரபுக்கு சொந்தமானது, என்றும் கூறி இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி,

ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய ராம்குமார் தரப்புக்கு அனுமதி அளித்தது. அத்துடன்  கடன் பிரச்னைக்கு தீர்வு காணும்படி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!